Thursday, July 23, 2009

உயரப் பறந்த இலை!





தண்ணீரில் தத்தளித்த எறும்புகளுக்கு
படகாய் வந்த இலை! -Vivake, நீங்கள்
என்றுமே எங்கள் தலை!!!

இன்று, இலை வாழ்வில் மேலும் உயரங்களை நோக்கி பறக்கின்றது!
ஆனாலும் எறும்புகளுக்கு (வருத்தம் இருந்தும்) பயமில்லை!
நீந்தக் கற்றுக் கொடுத்து விட்டு தான் பறக்கின்றது என்பதால்!

இந்த இலை எல்லா உயரங்களையும் தொட்டு விட
என்றும் நன்றியோடு வாழ்த்தும் எறும்புகளுள் ஒருவன் - நான்! :)

Tuesday, February 24, 2009

எல்லா புகழும் இறைவனுக்கே !!

Image courtesy: A R Rahman fans community in orkut (http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=16502)

தமிழ்த்திரை உலகில் "ரோஜா"வாக அரும்பி
"சின்னச் சின்ன ஆசை"களை பரப்பிய இசைப்புயல் - இன்று,
உலக அரங்கில் "Millionaire" ஆக வளர்ந்து
"Jai Ho!" என்று வெற்றி முழக்கம் இட்டுக் கொண்டிருக்கிறது!!

இசையால் என்ன செய்ய முடியும்?

இசைப்புயலே!

'தேசப்பற்றை ஊட்ட முடியுமா?' என்ற போது
'வந்தே மாதரம்' என்று கர்வ கூச்சலிட்டாய்!!
------"தாயே உன் பெயர் சொல்லும் போது இதயத்தில் மின்னலை பாயுதே !"
'மனித நேயத்தை வளர்க்க முடியுமா?' என்றவரிடம்
'Pray for me brother!' என்று அழகாகச் சொன்னாய்!
------"Are you searching for a reason to be kind?"
'அமைதியின் வாசம் என்ன?' என்றவருக்கும்
அமைதியாய் 'வெள்ளைப் பூக்கள்'-ஐ நீட்டினாய்!!
------"விடியும் பூமி அமைதிக்காக விடிகவே!"

அத்தனைக் கேள்விக்கும் இசையால் பதில் அளித்தாய்,
அனைவரும் இசையும்படி!

கவிஞர் வாலி ஒரு மேடையில் உன்னைப் பற்றிக் கூறியது நினைவுக்கு வருகிறது!
"ரகுமான் இல்லாமல் என்னால் ராமாயணம் கூட பாட முடியாது!
ரகுமான் இல்லாது ராமாயணம் ஏது?
'ரகு'-'மான்' இல்லாது ராமாயணம் ஏது?"

கஷ்டங்களை மறக்கும் இசை தந்தாய்
'முஸ்தபா'வை அனைவருக்கும் நண்பனாக்கினாய்!!
காலையில் கண்விழித்தால் கைதொழும் தேவதை அம்மா என்றாய்!!
'அன்பென்ற மழையிலே' அகிலத்தை நனைய வைத்தாய்!!

இசையே உனக்குள் அடக்கம்
அதனால்தானா இந்த தன்னடக்கம்?

அத்தனைக்கும் நன்றி!!

---------------அன்பு ரசிகன்-----------------------

Sunday, February 15, 2009

Kirukkanin......!!!!

கிறுக்கனின்.....

Pongal films?
குருகுலம் "படிக்காதவன்" கையில் "வில்"லற்றே
கருத்திலா பொங்கல் படம்.

Paavam Airtel!
தமிழகம் சென்றால் தவறாமல் செய்வது
உரிமை நண்பனுடன் SMS உரையாடல்
அன்றும் அப்படியே!!
என் எண்ண அலைகளை வானலைகளில் ஏந்தி சென்றது Airtel!
"Rh" என்று அனுப்பினான் ஆருயிர்;
வேதனை,
அணுக முடியவில்லை அதன்பின் அவனை!
பாவம் Airtel!
அப்பாக்கவுண்டர் தோட்டம் வரை செல்வது - அதன் சக்திக்கும்
அப்பாற்பட்டது போலும்!! :-(

V-Day special:
உலகை மறந்தேன்; உவகை அடைந்தேன்
உன்னாலே உன்னாலே !!
அழகை ரசிப்பேன்; அருளை அடைவேன்
அன்பாலே அன்பாலே !!

கவிஞனிடம் கேட்டார்கள்,
"கவிதை எழுதுகிறாயே, காதல் கொண்டாயோ?"
கவிஞன் கூறினான்,
"ஆம்! காதல் கொண்டேன்; கவிதையின் மீது!
ஓர் அழகிய கவிதையின் மீது!!"

- கிறுக்கல்கள் தொடரும்........